Posts

'யாருக்குத் தெரியும்?'

Image
"செங்கல்பட்டு தாண்டினால் அஷோக் செல்வனை யாருக்குத் தெரியும்?‌ " - சில வருடங்களுக்கு முன்  ஒரு  திரையுலகப் பிரமுகர்  ஒரு  பயிற்சிப் பட்டறையில்  எதற்கோ உன்னை  உதாரணம் சொல்லி மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த என் மனம் பட்ட பாடு..கண்களில் நீர் நிரம்பியது.  அப்போது "தெகிடி" திரையரங்கில் இரண்டு மாதங்கள்  ஓடியிருந்த  ஒரு வெற்றிப் படம். "விண்மீன் விதையில்"  பாடல்  யூட்யூபில் ஒரு  கோடிப் பார்வைகளைத் தாண்டியிருந்தது. பரவலாக நீ  மக்களுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டாய் என நான் மகிழ்ந்திருந்த நேரம்.   இதுவே  நீ ஒரு திரையுலக வாரிசாக இருந்திருந்தால் அந்தப் பேச்சாளரின்  உதாரணம் எப்படி மாறியிருக்கும் என்று  சிந்தனை ஓடியது. கதையே வேறாக இருந்திருக்கும். யாராக இருந்தால் என்ன?வளரும் கலைஞனை ஊக்கப் படுத்துவதல்லவா  சீனியர்களுக்கு அழகு? அதைச் செய்யாவிட்டால் பரவாயில்லை. ஒரு நெகட்டிவ் உதாரணமாக  உன் பேரைச் சபையில் சொல்வது  அநாகரிகமான செயலாகவே தோன்றியது. அதை அங்கேயே  அவரிடம் கேட்டுவிடத் துடித்தது மனம்.  உன்னிடம் என் ஆற்றாமையை, கோபத்தைப் பகிர்ந்த

மனவரி

               காலை சமையல் வேலைகள் முடிந்ததும் ஒரு கப் சூடான காஃபியுடன் பால்கனி ஊஞ்சலில் உட்காந்தேன்.. நேற்று சாயங்காலத்திலிருந்து ஒரு சின்னக் கோபம்  மண்டையைக் குடைந்து கொண்டிருந்தது .நேற்று சின்னது. இன்று அசுர வேகத்தில் வளர்ந்து தலைவலியாக மாற்றம் அடைந்திருந்தது. எப்படி ஒருவரால் இப்படி  பேச முடியும்?  கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்பத் திரும்ப அதே கேள்வி மனதில். சமையலில் மனம் ஒன்றாமல் குக்கரிடம் கை சூடு வாங்கியிருந்தது.எத்தனை வருஷம் சமையல் அனுபவம் இருந்தாலும் தியானம் போல ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அலைபாய்ந்தால் சுடச்சுட   இப்படிக் கை மேல்,பலன் உறுதி.   அட்டகாசமான ஃபில்டர் காபியோ கீழே   பள்ளிப் பேருந்துகளைக் கண்டதும் உள்ளே பாய்ந்து ஏறிச் சத்தமிடும் குழந்தைகளின் குதூகலமோ  வெயிலுக்கும் குளிருக்கும் இடைப்பட்ட  இதமான காலநிலையோ எதுவுமே  ரசிக்கவில்லை.  இவற்றையெல்லாம் ரசித்தபடி காபியை சுடச்சுட ரசித்து அருந்தும் வழக்கமான மனோநிலை  அடியோடு மாறியிருந்தது. ஆறிய காபியை பார்த்தபடி யோசனை அதே சிந்தனைக்குள்  சிக்கியது. எருமைமாடு தெரிந்தே  சேற்றுத் தண்ணிக்குள் கிடப்பது போல  ஏன் இப்படி? சே... மொபைல்

வட்டார "வழக்கு"

*வட்டார "வழக்கு"*    வளரும் வயதில் வீட்டிலோ உறவினர் வீடுகளிலோ கொங்குத் தமிழின் ஆட்சிதான் பரிபூரணமாக இருந்தது.. பள்ளிக் காலத்திலும் கல்லூரியிலும் ஈரோட்டில் விடுதியில் தங்கியிருந்தாலும்  கொங்குத் தமிழைத் தவிர எதுவும் அதிகமாக காதில் விழுந்த மாதிரி நினைவில்லை. என்னுடைய வட்டம் அவ்வளவு  குட்டியானது!! திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்து குட்டி கிராமத்திலிருந்து  பெரிய்ய சென்னை மாநகருக்கு இடம் பெயரும் வரை இதே நிலை தான்.  திரைப்படம் மூலமும் வார இதழ்கள் வாசிப்பதன் மூலமும் ஓரளவு பரிச்சயப் பட்டிருந்தவை -ஆத்து பாஷையும் மெட்ராஸ் பாஷையும் தான். சென்னை வந்தப்புறம் தான் "அடடா தமிழில் இத்தனை வகைகளா" என்று ஆச்சரியப் பட்டுப் போனேன்!! இந்தி தெரியவில்லை என்றால் தென்னிந்தியா தாண்டினால் அவ்ளோதான் என்று கேள்விப் பட்டதுண்டு. ஆனால் ஈரோட்டைத் தாண்டி சென்னைக்கு வந்தாலே கொங்குத் தமிழ்  அவங்களுக்கும் சென்னை செந்தமிழ் நமக்கும் புரியாம போகும்னு தெரிஞ்சப்ப ஒரு பயம் வந்தது நிஜம். அப்போது  ஆங்கிலம்  ஓரளவு கை கொடுத்தது. ஆனாலும்இந்த வட்டார வழக்குகள் தந்த  சுவையான அனுபவங்கள் மறக்க முடியாதவை.  குடும

தூரி நோம்பி

தூரி நோம்பி   இன்றைய நாட்களின் வெறுமையில் சிறுவயது நினைவுகள் வண்ணங்களை நிரப்பும் போதெல்லாம், மனசுக்கு மிக நெருக்கமாக இருப்பது தூரி நோம்பி/ ஆடி நோம்பி என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஆடி 18 தான். ஆடி நோம்பி, தை நோம்பி, தேர் நோம்பி எல்லாம் கொங்கு விவசாயக் குடும்பங்களில் உள்ள  சிறுசுகளின் மனசில்  குதூகலத்தை விதைக்கும் பண்டிகைகள். நோம்பி அப்படின்னா  கொங்கு அகராதியில் பண்டிகை . தூரி நோம்பி மனசுக்கு பிடிக்க முதல் காரணம் பெரிய லீவு முடிஞ்சு  ஹாஸ்டலுக்குப் போனதுக்கப்புறம் வீட்டுக்கு வர்றதுக்கு கெடைக்கிற முதல் விடுமுறை !!  மூணு நாள் லீவுங்கறது அவ்வளவு பெரிய சந்தோஷம்!!  அடுத்தது ஆடி நோம்பிக்கு கண்டிப்பா புதுத் துணி உண்டு. ஃப்ராக்,கௌன், ஸ்கர்ட்  மாதிரி குட்டித்துணி எல்லாம் அஞ்சாறு வயசு வரைக்கும் தான்.மேலிருந்து  முழங்காலுக்குக் கொஞ்சம் கீழே வரைக்கும்  இருக்கும்   பாடிபாவாடையும் இடுப்பு வரை இருக்கும் நீள ஜாக்கெட்டும் ஏழெட்டு வயசு வரைக்கும் போடுவாங்க.  தரைகூட்டற அளவுக்கு கால் வழிய பாவாடையும் கை வைத்த நீள மேல்சட்டையும்  ஒரு பண்ணன்டு வயசு வரைக்கும் . அதுக்கப்புறம் தாவணி என்று தான்  அம்பது வருஷத்து

எறும்புக் குழியும் எழுத்தறிவும்

          "ஏன் வாசிக்க வேண்டும்"-சமீபத்தில்  ஒரு  தோழியின் கேள்வி. "ஏன் சுவாசிக்க வேண்டும்?" என்ற என் மனதில் எழுந்த கேள்வியே பதிலாய் அமைந்தது. எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பிக்கும் போது தொடங்குகிறது நம் ஒவ்வொருவரின் வாசிப்புப் பயணமும். அதில் எவ்வளவு தூரம்தொடர்ந்து விருப்பத்துடன்  பயணிக்கிறோம் என்பது அவரவர் தேர்வு. வீட்டுப் பெரியவர்களிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வாசிப்புப் பழக்கம் இயல்பாக வர நிறைய வாய்ப்புள்ளது.எனக்கும் அப்படியே தான்.  பொதுவாக கொங்குப் பகுதிகளில் விவசாயக் குடும்பங்களில் இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்பு வரை ஆண்குழந்தைகள் மட்டுமே பள்ளிக்கு அனுப்பப் பட்டனர். சமையல் செய்வதும்  மீதி நேரத்தில் காடு கரை ஆடு மாடுன்னு விவசாய வேலைகள் செய்வதும் மேற்பார்வையிடுவதும்  தான் பெண்களின் வேலை. பெரிய விவசாயக் குடும்பங்களிலும் இதே நிலை தான். ஓய்வு நேரம் ஒன்று இருப்பதும் அப்போது அவர்களுக்குப் படிக்கத் தெரிவதும் அவர்கள் புத்தகம் படிப்பதும் அரிய காட்சிகள்.எங்காவது ஓரிரண்டு முற்போக்குச் சிந்தனை உள்ள தந்தையை வரமாய்ப் பெற்றவர்களுக்கே அது சாத்தியம். ஆண்குழந்தைகளுக்கு மட்டும்

உணவல்ல உணர்வு!

உணவல்ல உணர்வு!           எதையோ தேடி அலைந்து கொண்டிருந்த மேகக் கூட்டங்களுக்குள் மெல்ல மெல்ல அமிழ்ந்து போகும்   அந்திச்சூரியனின் தங்கநிறம்,  வாகன இரைச்சல் இல்லாததால் காதை வருடிய கூடு திரும்பும் பறவைகளின் குரலோசை, காற்று மாசுபடாததால்   சுத்தமான தண்ணீரில் கழுவி பருத்தித் துணியில் அழுத்தித்  துடைத்தது போல் பளிச்சென்றிருந்த  வானம், இதுவரை  புகைமூட்டத்தில் மங்கலாகத் தெரிந்து  இப்போது பளீரெனத் தென்படும்   தூரத்துக் கட்டிடங்களின் காட்சி,எதையாவது புதிதாகச் செய்து தன்னைத் தானே உற்சாகப் படுத்தும் ரகசியம் தெரிந்த பேரன் சச்சித்தின் திகட்டாத மழலை, தோட்டத்தில் தனியாக மாட்டிக் கொண்ட  என்னவர், ஆளரவமின்றி வெறிச்சென இருக்கும் பக்கத்துப் பூங்கா என்று பல திசைகளிலும் பயணித்துக் கொண்டிருந்தது எங்கள் உரையாடல்.சாதாரணமாக இருக்க வேண்டிய பல விஷயங்கள் அதிசயம் போல பேசு பொருளாகிறது.  பால்கனியில் குடும்பமாய் அமர்ந்து மாலைக் காஃபியை ரசித்துக் கொண்டிருந்தோம், கோவிட் 19 புண்ணியத்தில்.  மாப்பிள்ளையிடமிருந்து சட்டென ஒரு கேள்வி வந்தது. "ஈஸ்ட் இருக்கா?" லாக்டவுன்னா எல்லாமே கொஞ்சம் டவுன் தான்.. அதுக்குன்

சகிப்பதேன் சகியே..?!

சகிப்பதேன் சகியே...?! "வலிமையான கேள்விகள் பொருத்தமான தேவையான  பதில் கிடைக்கும் வரை  ஓய்வதில்லை "  -  ஈரோடு கதிரின் வரிகள் இவை. எனக்குள்ளும் அப்படி ஒரு கேள்வி  உறுத்திக் கொண்டே இருந்தது. நெருங்கிய வட்டத்தில் நடந்திருந்த ஒரு சம்பவத்தால்  அக் கேள்வி விஸ்வரூபமெடுததிருந்தது. இன்றைய இளம் பெண்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அசால்ட்டாக சிக்கலான  சூழல்களைக் கையாளும் திறனும் பார்க்கும் பொழுது     பல சமயங்களில் பெருமையாகவும்  சில சமயங்களில் பொறாமையாகவும்(!) கூட உணர்வதுண்டு. ஆனால் "பணியிடத்தில் பாலியல் அச்சுறுத்தல்"என்ற விஷயத்தால் இன்று பாதிக்கப் படும்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டே  செல்கிறது என்று வாசிக்கும் பொழுது மனதில்   ஒரு விதமான பாரம் கூடுவதைத் தவிர்க்க இயலவில்லை.  "இதெல்லாம் சகஜமப்பா" என்று சாதாரணமாகக் கடக்க முடியாத  கடக்கக் கூடாத ஒரு நிகழ்வல்லவா இது.  "பெண்களின் பெயரை விட நீளமான பட்டங்களும்  நான்கு இலக்க ஐந்து இலக்கங்களில் வாங்கும் கனவுச் சம்பளமும் அவை கொடுக்கும் தன்னம்பிக்கையும் பணியிடத்தில் அவர்களுடைய சுய பாதுக