தூரி நோம்பி
தூரி நோம்பி இன்றைய நாட்களின் வெறுமையில் சிறுவயது நினைவுகள் வண்ணங்களை நிரப்பும் போதெல்லாம், மனசுக்கு மிக நெருக்கமாக இருப்பது தூரி நோம்பி/ ஆடி நோம்பி என்று பேச்சு வழக்கில் சொல்லப்படும் ஆடி 18 தான். ஆடி நோம்பி, தை நோம்பி, தேர் நோம்பி எல்லாம் கொங்கு விவசாயக் குடும்பங்களில் உள்ள சிறுசுகளின் மனசில் குதூகலத்தை விதைக்கும் பண்டிகைகள். நோம்பி அப்படின்னா கொங்கு அகராதியில் பண்டிகை . தூரி நோம்பி மனசுக்கு பிடிக்க முதல் காரணம் பெரிய லீவு முடிஞ்சு ஹாஸ்டலுக்குப் போனதுக்கப்புறம் வீட்டுக்கு வர்றதுக்கு கெடைக்கிற முதல் விடுமுறை !! மூணு நாள் லீவுங்கறது அவ்வளவு பெரிய சந்தோஷம்!! அடுத்தது ஆடி நோம்பிக்கு கண்டிப்பா புதுத் துணி உண்டு. ஃப்ராக்,கௌன், ஸ்கர்ட் மாதிரி குட்டித்துணி எல்லாம் அஞ்சாறு வயசு வரைக்கும் தான்.மேலிருந்து முழங்காலுக்குக் கொஞ்சம் கீழே வரைக்கும் இருக்கும் பாடிபாவாடையும் இடுப்பு வரை இருக்கும் நீள ஜாக்கெட்டும் ஏழெட்டு வயசு வரைக்கும் போடுவாங்க. தரைகூட்டற அளவுக்கு கால் வழிய பாவாடையும் கை வைத்த நீள மேல்சட்டையும் ஒரு பண்ண...