Posts

Showing posts from November, 2022

'யாருக்குத் தெரியும்?'

Image
"செங்கல்பட்டு தாண்டினால் அஷோக் செல்வனை யாருக்குத் தெரியும்?‌ " - சில வருடங்களுக்கு முன்  ஒரு  திரையுலகப் பிரமுகர்  ஒரு  பயிற்சிப் பட்டறையில்  எதற்கோ உன்னை  உதாரணம் சொல்லி மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த என் மனம் பட்ட பாடு..கண்களில் நீர் நிரம்பியது.  அப்போது "தெகிடி" திரையரங்கில் இரண்டு மாதங்கள்  ஓடியிருந்த  ஒரு வெற்றிப் படம். "விண்மீன் விதையில்"  பாடல்  யூட்யூபில் ஒரு  கோடிப் பார்வைகளைத் தாண்டியிருந்தது. பரவலாக நீ  மக்களுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டாய் என நான் மகிழ்ந்திருந்த நேரம்.   இதுவே  நீ ஒரு திரையுலக வாரிசாக இருந்திருந்தால் அந்தப் பேச்சாளரின்  உதாரணம் எப்படி மாறியிருக்கும் என்று  சிந்தனை ஓடியது. கதையே வேறாக இருந்திருக்கும். யாராக இருந்தால் என்ன?வளரும் கலைஞனை ஊக்கப் படுத்துவதல்லவா  சீனியர்களுக்கு அழகு? அதைச் செய்யாவிட்டால் பரவாயில்லை. ஒரு நெகட்டிவ் உதாரணமாக  உன் பேரைச் சபையில் சொல்வது  அநாகரிகமான செயலாகவே தோன்றியது. அதை அங்கேயே  ...