Posts

Showing posts from March, 2020

சகிப்பதேன் சகியே..?!

சகிப்பதேன் சகியே...?! "வலிமையான கேள்விகள் பொருத்தமான தேவையான  பதில் கிடைக்கும் வரை  ஓய்வதில்லை "  -  ஈரோடு கதிரின் வரிகள் இவை. எனக்குள்ளும் அப்படி ஒரு கேள்வி  உறுத்திக் கொண்டே இருந்தது. நெருங்கிய வட்டத்தில் நடந்திருந்த ஒரு சம்பவத்தால்  அக் கேள்வி விஸ்வரூபமெடுததிருந்தது. இன்றைய இளம் பெண்களின் தைரியமும் தன்னம்பிக்கையும் அசால்ட்டாக சிக்கலான  சூழல்களைக் கையாளும் திறனும் பார்க்கும் பொழுது     பல சமயங்களில் பெருமையாகவும்  சில சமயங்களில் பொறாமையாகவும்(!) கூட உணர்வதுண்டு. ஆனால் "பணியிடத்தில் பாலியல் அச்சுறுத்தல்"என்ற விஷயத்தால் இன்று பாதிக்கப் படும்  பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள்  அதிகரித்துக் கொண்டே  செல்கிறது என்று வாசிக்கும் பொழுது மனதில்   ஒரு விதமான பாரம் கூடுவதைத் தவிர்க்க இயலவில்லை.  "இதெல்லாம் சகஜமப்பா" என்று சாதாரணமாகக் கடக்க முடியாத  கடக்கக் கூடாத ஒரு நிகழ்வல்லவா இது.  "பெண்களின் பெயரை விட நீளமான பட்டங்களும்  நான்கு இலக்க ஐந்து இலக்கங்களில் வாங்கும் கனவுச் சம்பளமும் அ...

தகிப்பு

தகிப்பு    லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தறையிறங்க ஆயத்தமானது நாங்கள் பயணித்த  பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம். சொகுசான பிஸினஸ் க்ளாஸ் பயணம். முழுதாக அனுபவிக்க முடியாமல் ஏதேதோ நினைவுகளால் நிரம்பியிருந்தது மனம். "ஊரான் ஊரான் தோட்டத்திலே ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்காய். காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன். வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப் பணம். வேடிக்கை செய்யுது சின்னப் பணம்" ஊரில் பாடும் கும்மிப் பாடல் மனதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.  சுங்கத்துறை நடைமுறைகள் முடித்து உடைமைகளைச் சரிபார்த்து  வாடகை வண்டியில் ஏறினோம். புராதனமும் நவீனமும் இணைந்த அழகியதொரு கலவையாக  ஈர்த்தது லண்டன் மாநகரம்.  ஆனாலும் காட்சிகளில் லயிக்கவில்லை மனம். "சூரியன்  மறையாத தேசம்" என்று சொல்லிக் கொண்டு எங்கள்  பாட்டன் பூட்டனை எல்லாம் அடிமையாக்கி ஆண்டவன் தானே இந்த பிரிட்டிஷ்காரன் ?" என்ற  ரீதியில் மனசுக்குள் ஒரு தகிப்பு . சரித்திரப் புத்தகங்களில் படித்த சுதந்திரப் போராட்ட வரலாறுகள் எல்லாம்  மனதில் வந்தன.அனலாய்  தகித்தது மனது. ல...