Posts

Showing posts from October, 2020

வட்டார "வழக்கு"

*வட்டார "வழக்கு"*    வளரும் வயதில் வீட்டிலோ உறவினர் வீடுகளிலோ கொங்குத் தமிழின் ஆட்சிதான் பரிபூரணமாக இருந்தது.. பள்ளிக் காலத்திலும் கல்லூரியிலும் ஈரோட்டில் விடுதியில் தங்கியிருந்தாலும்  கொங்குத் தமிழைத் தவிர எதுவும் அதிகமாக காதில் விழுந்த மாதிரி நினைவில்லை. என்னுடைய வட்டம் அவ்வளவு  குட்டியானது!! திருமணம் முடிந்து ஐந்து வருடங்கள் கழித்து குட்டி கிராமத்திலிருந்து  பெரிய்ய சென்னை மாநகருக்கு இடம் பெயரும் வரை இதே நிலை தான்.  திரைப்படம் மூலமும் வார இதழ்கள் வாசிப்பதன் மூலமும் ஓரளவு பரிச்சயப் பட்டிருந்தவை -ஆத்து பாஷையும் மெட்ராஸ் பாஷையும் தான். சென்னை வந்தப்புறம் தான் "அடடா தமிழில் இத்தனை வகைகளா" என்று ஆச்சரியப் பட்டுப் போனேன்!! இந்தி தெரியவில்லை என்றால் தென்னிந்தியா தாண்டினால் அவ்ளோதான் என்று கேள்விப் பட்டதுண்டு. ஆனால் ஈரோட்டைத் தாண்டி சென்னைக்கு வந்தாலே கொங்குத் தமிழ்  அவங்களுக்கும் சென்னை செந்தமிழ் நமக்கும் புரியாம போகும்னு தெரிஞ்சப்ப ஒரு பயம் வந்தது நிஜம். அப்போது  ஆங்கிலம்  ஓரளவு கை கொடுத்தது. ஆனாலும்இந்த வட்டார வழக்குகள் தந்த  சுவையான அனுபவ...