Posts

Showing posts from April, 2020

உணவல்ல உணர்வு!

உணவல்ல உணர்வு!           எதையோ தேடி அலைந்து கொண்டிருந்த மேகக் கூட்டங்களுக்குள் மெல்ல மெல்ல அமிழ்ந்து போகும்   அந்திச்சூரியனின் தங்கநிறம்,  வாகன இரைச்சல் இல்லாததால் காதை வருடிய கூடு திரும்பும் பறவைகளின் குரலோசை, காற்று மாசுபடாததால்   சுத்தமான தண்ணீரில் கழுவி பருத்தித் துணியில் அழுத்தித்  துடைத்தது போல் பளிச்சென்றிருந்த  வானம், இதுவரை  புகைமூட்டத்தில் மங்கலாகத் தெரிந்து  இப்போது பளீரெனத் தென்படும்   தூரத்துக் கட்டிடங்களின் காட்சி,எதையாவது புதிதாகச் செய்து தன்னைத் தானே உற்சாகப் படுத்தும் ரகசியம் தெரிந்த பேரன் சச்சித்தின் திகட்டாத மழலை, தோட்டத்தில் தனியாக மாட்டிக் கொண்ட  என்னவர், ஆளரவமின்றி வெறிச்சென இருக்கும் பக்கத்துப் பூங்கா என்று பல திசைகளிலும் பயணித்துக் கொண்டிருந்தது எங்கள் உரையாடல்.சாதாரணமாக இருக்க வேண்டிய பல விஷயங்கள் அதிசயம் போல பேசு பொருளாகிறது.  பால்கனியில் குடும்பமாய் அமர்ந்து மாலைக் காஃபியை ரசித்துக் கொண்டிருந்தோம், கோவிட் 19 புண்ணியத்தில்.  மாப்பிள்ளையிடமிருந்து சட்டென ஒரு கே...