Posts

Showing posts from February, 2020

துளிர்

துளிர் ஒரு  நாளின்  பொழுதுகளில் நான்  அதிகமாக எதிர்பார்த்து ஏங்குவது  தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட அந்த மலர்ந்தும் மலராத தெளிந்தும் தெளியாத காலைப் பொழுதின் கலங்கல் நிமிடங்களைத் தான். மனம் விழித்துக் கொண்டாலும் கண்களை விழிக்க முடியாமல் அல்லது விழிக்கப் பிடிக்காமல்  நினைவின் வீதிகளில் ஒரு குட்டி உலா சென்று வருவதில் உள்ள சுகமே அலாதி. நகரை விட்டுக் கொஞ்சம் தள்ளியிருக்கின்ற குடியிருப்பு என்பதால் கான்க்ரீட் காட்டிலும் சில மரங்கள் மிச்சமிருந்தன. காலையிலேயே பெயர் தெரியாத இரண்டு மூன்று பறவைகள் "இன்னுமா தூக்கம்" என்று ஓயாமல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தன.  செம்பூத்து,மைனா,போன்ற பறவைகளின் இசைக் கச்சேரியிலும் "பளிச்சுனு வெடிஞ்சிருச்சு. . எந்திரி. எந்திரி"என்ற அம்மாயி ஆத்தாக்களின் செல்ல அதட்டலிலும் விடியும் கிராமத்துக் காலைநிமிடங்கள் நினைவில் மோதியது. இந்தப் பறவைகள் எதைத் தேடி எந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தனவோ?  திரும்பிச் செல்ல விரும்பியும்  இப்பெரு நகரத்தின்  மாயவலையிலிருந்து மீள முடியாமல்  தவிக்கிறதோ பல மன...