'யாருக்குத் தெரியும்?'
"செங்கல்பட்டு தாண்டினால் அஷோக் செல்வனை யாருக்குத் தெரியும்? "
- சில வருடங்களுக்கு முன் ஒரு திரையுலகப் பிரமுகர் ஒரு பயிற்சிப் பட்டறையில் எதற்கோ உன்னை உதாரணம் சொல்லி மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார். கூட்டத்தின் கடைசி வரிசையில் அமர்ந்திருந்த என் மனம் பட்ட பாடு..கண்களில் நீர் நிரம்பியது.
அப்போது "தெகிடி" திரையரங்கில் இரண்டு மாதங்கள் ஓடியிருந்த ஒரு வெற்றிப் படம். "விண்மீன் விதையில்" பாடல் யூட்யூபில் ஒரு கோடிப் பார்வைகளைத் தாண்டியிருந்தது. பரவலாக நீ மக்களுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டாய் என நான் மகிழ்ந்திருந்த நேரம்.
இதுவே நீ ஒரு திரையுலக வாரிசாக இருந்திருந்தால் அந்தப் பேச்சாளரின் உதாரணம் எப்படி மாறியிருக்கும் என்று சிந்தனை ஓடியது. கதையே வேறாக இருந்திருக்கும்.
யாராக இருந்தால் என்ன?வளரும் கலைஞனை ஊக்கப் படுத்துவதல்லவா சீனியர்களுக்கு அழகு? அதைச் செய்யாவிட்டால் பரவாயில்லை. ஒரு நெகட்டிவ் உதாரணமாக உன் பேரைச் சபையில் சொல்வது அநாகரிகமான செயலாகவே தோன்றியது. அதை அங்கேயே அவரிடம் கேட்டுவிடத் துடித்தது மனம்.
உன்னிடம் என் ஆற்றாமையை, கோபத்தைப் பகிர்ந்த போது பதிலாய் வந்தது உன் புன்சிரிப்பு மட்டுமே.
இதைப் போல் எத்தனை அலட்சியங்கள்? எத்தனை அவமானங்கள்?
கடைசிநேர ஏமாற்றங்கள்?
இன்று SRI LANKA USA,CANADA, UK,UAE, SINGAPORE, MALAYSIA என்று தமிழர் வாழும் திசையெங்கும் உன்னைத் தெரிய வைத்துள்ளது உன் தொடர் உழைப்பும் மன உறுதியும் தான்.
இதைவிட வேறென்ன பரிசு வேண்டும் ஒரு அம்மாவுக்கு?
எப்போதும் மகிழ்ந்திரு கண்ணே❤️.
பிறந்தநாள் வாழ்த்துகள்💐.
'காதலிக்க நேரமில்லை' பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது.
"அசோகர் உங்க மகரா"?
Comments
Post a Comment